தீர்வு தாமதமானால் நிலைமை உக்கிரமடையும்

14.07.2022 09:50:55

நாட்டில் கடந்த 9 ஆம் திகதி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கத்திற்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அப்படியில்லை என்றால் நாட்டில் தொடர்ந்தும் பதற்றம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் புதிய அதிபர் மற்றும் பிரதமரை நியமிப்பது தொர்பில் இணக்கம் ஏற்பட்டது.

இதனடிப்படையில், புதிய அதிபர் மற்றும் பிரதமரை கூடிய விரைவில் நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு வழங்க தாமதித்தால் நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மேலும் உக்கிரமடையும்.

பதற்றமான சூழல் தொடரும்

அப்போது இலங்கை சட்டம் இல்லாத நாடாக மாறிபோகும் என்பதுடன் அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போகும் எனவும் டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.