சட்டத்தை சான்றுப்படுத்தினார் சபாநாயகர்!
18.02.2026 14:59:15
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது