ஓப்போவின் Reno 11 சீரீஸ் வெளியீட்டு திகதி, சிறப்பம்சங்கள் கசிவு
பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Oppo-வின் துணை பிராண்டான Reno 11 தொடர் அம்சங்கள் கசிந்துள்ளன.
ஒப்போவின் புதிய ரெனோ 11 சீரிஸ் நவம்பர் 23-ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னதாக கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், Oppo Reno 11 வரிசை தாமதமாகிவிட்டதாகவும், இப்போது டிசம்பரில் வந்துவிடும் என்றும் டிப்ஸ்டர் கூறியுள்ளார்.
வரவிருக்கும் Oppo Reno 11, Oppo Reno 11 Pro போன்களின் அம்சங்கள் விவரக்குறிப்புகளுடன் ஆன்லைனில் கசிந்துள்ளன. Oppo Reno 11 பேசிக் மொடல் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 SoC உடன் வருகிறது. ஆனால், Oppo Reno 11 Pro மொடல் Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
Oppo Reno 11 Pro கேமரா மற்றும் அம்சங்கள்:
Oppo Reno 11 மற்றும் Oppo Reno 11 Pro-வின் விவரக்குறிப்புகளை Weibo கசிந்துள்ளது.
Reno 11 Pro 1.5K ரெசல்யூஷன், 120Hz Refresh Rate, 2160Hz PWM உடன் ஹோல் பஞ்ச் ஸ்டைல் டிஸ்ப்ளேவைப் பெறுகிறது. இது LPDDR5X RAM, UFS 3.1ஸ்டோரேஜுடன் கூடிய Snapdragon 8+ Gen 1 SoC ஐக் கொண்டிருக்கலாம்.
இந்த Oppo Reno 11 Pro மாடல் Sony IMX890 முதன்மை கேமரா, Sony IMX355 அல்ட்ரா-வைட் கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட Sony IMX709 டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றை வழங்கும். இது 80W சார்ஜிங் ஆதரவுடன் 4,700mAh பேட்டரியை வழங்கும். மேலும், இதில் எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார், ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. கைபேசியின் எடை 190 கிராம் இருக்கலாம்.
Oppo Reno 11 விவரக்குறிப்புகள்:
கசிந்த தகவல்களின்படி, Oppo Reno 11 செல்ஃபி சென்சாருக்கான சென்டர் ஹோல் பஞ்ச் கட்அவுட்டுடன் கர்வ்டு டிஸ்பிலேவுடன் வரும். வெண்ணிலா மாடலில் MediaTek Dimensity 8200 SoC இருக்கும். ஒரு LVT600 முதன்மை கேமரா, ஒரு Sony IMX355 அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட Sony IMX709 டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைப் பெறலாம். இது 67W சார்ஜிங் ஆதரவுடன் 4800mAh பேட்டரியை வழங்குகிறது. இதன் எடை 184 கிராம்.
இந்த போன் கர்வ் எட்ஜுடன் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று பின்புற கேமரா அமைப்புடன் காணப்படுகிறது. கேமராக்கள் செங்குத்தாக 2 ரிங் வடிவ மாட்யூல்களுடன் டூயல்-டோன் எல்இடி ப்ளாஷ் கொண்டுள்ளது.