திலீபனின் நினைவு ஊர்தியை மறித்து படையினர் அடாவடி

21.09.2022 02:35:24

வாகன ஊர்திப் பவனி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாட்களை நினைவு கூர்ந்து நகர்ந்து வரும் வாகன ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊர்திப் பவனியில் கலந்துகொண்டவர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த வாகனத்தை சோதனையிடுவதற்கும் முயற்சிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் நாட்களை நினைவு கூர்ந்து நகர்ந்து வரும் வாகன ஊர்திப் பவனி இன்று மன்னாரை சென்றடைந்தது.

பொத்துவில் பிரதேசத்திலிருந்து கடந்த 15 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று ஊர்திப் பவனி இன்று ஆறாவது நாளாக நகர்கிறது.

 

வவுனியா நகர்ப்பகுதி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஊர்திப் பவனி இன்று ஆரம்பமானது. இந்த நிலையில், மன்னார் மடு பகுதியைச் சென்றடைந்த ஊர்திக்கு மக்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இராணுவத்தால் இடைமறிப்பு

இதேவேளை, மன்னார் மடுச் சந்தியிலுள்ள காவலரனில் சிறிலங்கா இராணுவத்தினரால் திலீபனின் ஊர்திப் பவனி இடைமறிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.