இரட்டை சிசுக்களில் ஒன்று கொரோனாவுக்கு பலி

21.09.2021 06:46:37

மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில், 21 வயதான தாயொருவர் பிரசவித்த இரட்டைக் குழந்தைகளுள் ஒன்று, பிறந்து 5 நாள்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

மொனராகலை-ருப்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தாய், 13ஆம் திகதி பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்றே இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

எனினும் பிரசவத்தின் பின்னர் நான்கு நாள்கள் கடந்து, தாய்க்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தாய்க்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் பிரசவித்த ஒரு சிசு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மற்றைய சிசுவின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கைநேற்று வரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாய்கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.