மனதை உருக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ‘பெரியோனே ரஹ்மானே’ பாடல்!
மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார்.
கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் கதை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் கொரோனா காலத்தில் அரபு நாடுகளில் படமாக்கப்பட்டது.
இதையடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெரியோனே ரஹ்மானே’ என்ற பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. பாலைவனப் பகுதிகளில் படத்தின் நாயகன் மணற்புயலில் சிக்கிக் கொண்ட இடங்களில் ரஹ்மான் பயணிப்பது போல இந்த பாடல் உருவாக்கப்பட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.