சிங்கம் நான்காம் பாகம் வருமா?

24.03.2024 00:12:08

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படம் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் அடுத்தடுத்து ரிலீஸாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக கூறப்பட்ட ’அருவா’ திரைப்படம் திடீரென டிராப் ஆனது.
 

இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும் ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.
 

இதனால் இனிமேல் அவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணமாட்டார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இயக்குனர் ஹரி புதிதாக திறந்துள்ள குட்லக் டப்பிங் ஸ்டுடியோவின் திறப்பு விழாவுக்கு சூர்யா வருகை தந்தது திரையுலகில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போது மீண்டும் ஹரியும் சூர்யாவும் இணைந்து படம் பண்ணுவது பற்றி எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அதுபற்றி இயக்குனர் ஹரி பேசியுள்ளார். அதில் “நான் எங்கு சென்றாலும் சிங்கம் படத்தின் நான்காம் பாகம் பற்றி கேள்விகள் வருகின்றன. ஏனென்றால் ஹாட்ரிக் ஹிட்டடித்த படம் சிங்கம். அதனால் சிங்கம் நான்காம் பாகம் வருமா என்பதைக் காலம்தான் பதில் சொல்லவேண்டும்” எனக் கூறியுள்ளார்.