ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை

06.06.2024 07:10:00

ஜெயம் ரவி நடிக்கும் 33 வது திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கிமுடித்துள்ளார். இந்த படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’என்ற தலைப்பை வைத்துள்ளனர்.
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதைப் படக்குழு ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த வீடியோவில் ஏ ஆர் ரஹ்மான் குரலில் இடம்பெறும் பாடல் துணுக்கையும் இணைத்துள்ளனர்.