எட்டு பேர் ஜேர்மன் பொலிசாரால் கைது!
06.11.2024 07:50:54
ஜேர்மன் பொலிசார் இனவாத சித்தாந்தம் மற்றும் சதி கோட்பாடுகளால் ஊக்குவிக்கப்பட்ட நவ-நாஜி போராளிக் குழுவின் சந்தேகத்திற்குரிய எட்டு உறுப்பினர்களை கைது செய்துள்ளனர்.
அவர்கள் நவீன ஜேர்மன் அரசின் வீழ்ச்சிக்கான போரில் பயிற்சி பெற்றனர் என்று வழக்கறிஞர்கள் செவ்வாயன்று (05) தெரிவித்தனர்.
ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் போலந்து முழுவதும் 450 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனைகள் மற்றும் கைதுகளை மேற்கொண்டனர்.
அவர்களில் ஏழு பேர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் ஜோர்க் எஸ் – குழுவின் தலைவனாக சந்தேகிக்கப்படுபவர் – போலந்தில் கைது செய்யப்பட்டார்.
அடால்ஃப் ஹிட்லரின் நாஜி கட்சியுடன் தொடர்புடைய தீவிர வலதுசாரி சர்வாதிகார சித்தாந்தம் – தேசிய சோசலிசத்தால் ஈர்க்கப்பட்ட அரசாங்கத்தை உருவாக்க குழு திட்டமிட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.