இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

01.11.2025 13:53:36

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

எனவே, உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை.

இதனால், இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன