28 ஆம் திகதி திறப்பு ஜெயலலிதாவின் நினைவு இல்லம்
25.01.2021 09:27:18
சென்னை போயஸ்கார்டனிலுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் (வேதா நிலையம் ) இம் மாதம் 28ஆம் திகதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்தவகையில் அரசுடைமையாக்கப்பட்ட குறித்த நினைவு இல்லத்தை 28ஆம் திகதி காலை 10.30 மணியளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நினைவு இல்லம் திறக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27ஆம் திகதி மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் நிலையில் மறுநாள் வேதா நிலையம் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.