மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா..!

28.10.2022 16:01:40

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது. இந்தநிலையில் இன்று வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்தது தெரியவந்தது. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதா?என்பது குறித்து தகவல் இல்லை.