7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

08.08.2021 05:00:32

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: ஆதிதிராவிடர் நலத்துறை இணை செயலாளராக இருந்த செந்தாமரை நில நிர்வாக இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண் துறை இணை செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் பொதுப்பணித்துறை இணை செயலாளராகவும், வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இருந்த அருணா கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும், தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநராக இருந்த சர்வண்குமார் ஜடாவத் வேளாண்மை துறை கூடுதல் இயக்குநராகவும், பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருந்த ஆனி மேரி ஸ்வர்ணா வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை துணை செயலாளராகவும், உள்துறை (மதுவிலக்கு) இணை செயலாளராக இருந்த ஜான் லூயிஸ் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளராகவும், தொழிலாளர் நல ஆணைய இணை செயலாளராக இருந்த லட்சுமி சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.