இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஆரம்பம் !

27.02.2021 09:45:18

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், குருகுலராஜா, சட்டத்தரணி வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன் மற்றும் பல கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்

இக்கூட்டத்தில், ஜெனிவா அமர்வுகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.