4 நாட்களுக்கு மிதமான மழை

02.04.2022 11:13:14

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்தது.

 இன்று மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமாரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது.