சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்!
21.12.2024 09:42:09
எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். |
அதற்காக வேட்புமனுக்களை மீள அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோல், மாகாண சபை தேர்தலும் அடுத்த வருடத்தில் நடாத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். |