மோப்ப நாய்களின் உடலில் ஸ்மார்ட் கருவி
சார்ஜா போலீஸ்துறை சார்பில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கே-9 பிரிவு மோப்ப நாய்களின் உடல்நலனை கண்காணிக்க அதன் உடலில் ஸ்மார்ட் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
கொரோ னா தொற்றை பொது இடங்களில் கண்டுபிடிக்கவும் கே-9 மோப்ப நாய்கள் பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையில் ஒரு நபரின் கை இடையில் இருந்து வரும் வியர்வை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மோப்ப நாய்கள் மூலம் அதில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது சார்ஜா போலீஸ்துறையில் இந்த பணிக்காக 32 போலீஸ்துறையின் பயிற்சியாளர்களுடன் 80 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் செய்யப்படும் சோதனைகளில் 92 சதவீதம் துல்லியமான முடிவுகள் பெறப்பட்டுள்ளது.
தற்போது இந்த நாய்களுக்கு அதன் உடலில் உள்ள உறுப்புகள் சரியாக செயல்படுகிறதா? செயல்பாடுகள் நன்றாக உள்ளதா? உள்ளிட்டவைகளை கண்காணிக்க ஸ்மார்ட் கருவி ஒன்று நாயின் உடலில் கால்நடை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் உதவியினால் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட் கருவியானது பயிற்சியாளர்களின் செல்போனில் உள்ள செயலி மூலம் இயக்கப்படும். மேலும் மோப்ப நாயின் உடல் நலம் குறித்த தகவல்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.