பிரேஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் !

06.07.2021 08:57:38

 

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், பிரேஸில் அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரேஸில் அணியும் பெரு அணியும் மோதின.

ஒலிம்பிக் விளையாட்டங்கில் நடைபெற்ற இப்போட்டியில், பிரேஸில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் பிரேஸில் அணி சார்பில், லூகாஸ் பக்வெட்டா போட்டியின் 35ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

நடப்பு சம்பியனான பிரேஸில் அணி, இதுவரை ஒன்பது முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.