உலக சுகாதார அமைப்பு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது
03.11.2021 09:39:14
கோவாக்ஸின் தடுப்பூசியை அவசரகாலத்திற்கு பயன்படுத்த அங்கீகாரம் வழங்குவதற்கான கோரிக்கையை பரிசீலிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது.
பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே கோவாக்ஸின் தடுப்பூசி குறித்து கூடுதல் விளக்கங்களை கேட்டிருந்தது. அதன்படி மேலும் சில விபரங்களையும் பாரத் பயோடெக் நிறுவனம் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.