
பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!
25.08.2025 08:15:38
கொழும்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம் – ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், அவரது மனைவி புதையல் தோண்டிய விவகாரம் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, குறித்த கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி மற்றும் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.