படுதோல்வியை சந்தித்த தக் லைஃப்!

15.06.2025 06:10:00

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில், 8 நாட்களில் தக் லைஃப் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 87 கோடி மட்டுமே உலகளவில் வசூல் செய்துள்ளது.