பிரித்தானியாவை உலுக்கிய கொலை வழக்கு
பிரித்தானியாவை உலுக்கிய 3 சிறுவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது பயங்கரவாத தொடர்பு இருப்பதற்கான சந்தேகங்கள் எழுந்துள்ளன. சவுத் போர்ட்டில் ஜூலை மாதம் நடைபெற்ற டெய்லர் ஸ்விஃப்ட் நடன நிகழ்ச்சியில் நடந்த பயங்கர தாக்குதலில் எல்சி டாட் ஸ்டான்காம்ப், ஆலிஸ் டா சில்வா அகுயார் மற்றும் பெபே கிங் ஆகிய 3 பள்ளி சிறுவர்கள் கொலை செய்யப்பட்டனர். |
இந்த சம்பவத்தில் 18 வயது இளைஞர் ஆக்சல் ருடகுபனா(Axel Rudakubana) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து லங்காஷயரைச் பகுதியை சேர்ந்த ஆக்சல் ருடகுபனா மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் பத்து கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இந்நிலையில், சந்தேக நபரான ஆக்சல் ருடகுபனா-வின் வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது அங்கிருந்து ரிசின் என்ற உயிரியல் நச்சு மற்றும் அல்-கைதா பயிற்சி கையேடு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 1974 உயிரியல் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் கூடுதல் குற்றச்சாட்டையும், 2000ம் ஆண்டின் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பயங்கரவாத குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக Merseyside காவல்துறை கமிஷனர் செரீனா கென்னடி வழங்கிய தகவலில், ருடகுபனாவின் வீட்டை சோதனையிட்டதில், குறிப்பாக ரிசின் என்ற உயிரியல் நச்சு மற்றும் அல்-கைதா பயிற்சி கையேடு கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிப்படுத்தினார். இருப்பினும் ஜூலை மாதம் நடைபெற்ற சம்பவத்தை அவர்கள் பயங்கரவாத தாக்குதலாக இன்னும் வகைப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால் இத்தகைய நியமனத்திற்கு தெளிவான உந்துதல் நிறுவப்பட வேண்டும் என்று கமிஷனர் கென்னடி தெளிவுபடுத்தினார். இந்த சம்பவம் மற்றும் கூடுதல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. |