ஊரடங்கு உத்தரவை மீறிய 613 பேர் கைது!

18.09.2021 06:36:40

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 74,507 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் அமைக்கப்பட்ட 13 சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 1,804 பேர் அவர்கள் பயணித்த 1,168 வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அதேவேளை 104 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.