போராட்டத்தில் குதித்த யாழ் பல்.கலை மாணவர்கள்

20.02.2024 10:45:44

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் இன்றைய தினம்  வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய தாம்,  3ஆம் வருட 2ஆம் அரையாண்டில் கற்கிறோம். எனவே தமது  விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.