சீன – இலங்கை உறவை வலுப்படுத்த நடவடிக்கை!

17.06.2024 09:51:09

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜ தந்திர உறவுகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது.

 

இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று  சீனா சென்றுள்ளது.

பெய்ஜிங்கில் இடம்பெறும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் சீன வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட  துறைகள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.