கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய ரித்து வர்மா

06.08.2021 08:24:43

 

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்து வர்மா. அந்த படத்திலும் சரி அதற்கு முன்பு தெலுங்கில் அறிமுகமான பெல்லி சூப்புலு உள்ளிட்ட படங்கள் அனைத்திலும் சரி பக்கத்து வீட்டுப் பெண் போல பாந்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நாக சவுர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள வருடு காவலனே என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு அதிரடியான கவர்ச்சி ஆட்டம் ஆடியிருக்கிறார். இந்த பாடலின் டீசரை பார்த்தவர்கள் ரித்து வர்மாவா இப்படி என ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள். லட்சுமி சவுஜன்யா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகரும், தமனும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடி உள்ளார்.