"பதவியே போனாலும் என் ஆதரவு அவருக்குதான்".

26.06.2026 15:25:12

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக ஆன்டி பர்னாம் என்பவர் பதவியேற்க உள்ள நிலையில், அவர் பதவியேற்றதும் முதலில் வீட்டுக்கு அனுப்பப்போவது தற்போதைய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸைத்தான் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், தனது பதவியே போனாலும், தன் ஆதரவு ஆன்டிக்குத்தான் என்று கூறியுள்ளார் ரேச்சல். ரேச்சலுக்கு ஒரு ஜூனியர் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், பதவியிறக்கம் செய்யப்படலாம் என்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ரேச்சலிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

 

அதற்கு பதிலளித்த ரேச்சல், கேபினட்டில் முடிவுகள் எடுப்பது பிரதமர் ஆன்டி பர்னாமின் பொறுப்பு என்றும், பிரதமர் எடுக்கவிருக்கும் முடிவுகள் குறித்து முன்கூட்டியே தான் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

என்னைப் பொருத்தவரை, எனது ஆதரவு ஆன்டிக்குத்தான் என்று கூறியுள்ள ரேச்சல், அவர் ஒரு சிறந்த பிரதமராக இருப்பார் என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடுத்து வரும் பிரதமரானாலும் சரி, சேன்ஸலரானாலும் சரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சேன்ஸலராக பொறுப்பேற்கும்போது இருந்ததை விட, இப்போது அவர்கள் பொறுப்பேற்கும்போது வலுவான ஒரு பொருளாதாரம் இருக்கும் என்பது எனக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார் ரேச்சல்.