
புதிய K விசாவை அறிமுகப்படுத்திய சீனா!
அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வால் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னணியில், சீனா அக்டோபர் 1 முதல் புதிய K விசா வகையை அறிமுகப்படுத்தவுள்ளது. இது உலகளாவிய விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் திறமையான இளைஞர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த K விசா, சீனாவில் உள்ள அல்லது வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் STEM துறைகளில் பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்பை முடித்தவர்களுக்கு வழங்கப்படும். |
மேலும், கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும் விண்ணப்பனிக்கலாம். விசா பெற கல்வி சான்றிதழ் மற்றும் தொழில்முறை ஆவணங்கள் தேவைப்படும். K விசாவின் முக்கிய அம்சங்களில், பல முறை நுழைவுக்கு அனுமதி, நீண்ட காலம் செல்லுபடியாகும் விசா மற்றும் உள்ளூர் நிறுவனத்தின் அழிப்பு தேவையில்லாத விண்ணப்ப நடைமுறை ஆகியவை அடங்கும். இது சீனாவின் தற்போதைய 12 விசா வகைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் நெகிழ்வானதாகும். இந்த விசா மூலம், கல்வி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பரிமாற்றங்கள், தொழில் முயற்சிகள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். சீனாவின் திறந்த வெளிநாட்டு கொள்கையின் ஒரு பகுதியாக, இது 75 நாடுகளுடன் விசா விலக்கு ஒப்பந்தங்களை விரிவுபடுத்தும் முயற்சியின் தொடர்ச்சியாகும். சீனாவின் இந்த புதிய முயற்சி, அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு சீனாவை ஒரு மாற்று வாய்ப்பாக மாற்றும் வகையில் அமைந்துள்ளது. |