ஹார்முஸ் நீரிணையில் ஈரான் புதிய திட்டம்.

29.07.2026 10:27:16

ஈரான், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமன் நாட்டிற்கு தற்காலிக திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்தின் படி, ஒரு திசை போக்குவரத்து ஈரான் நீர்வழியாகவும், எதிர் திசை போக்குவரத்தின் ஒரு பகுதியும் ஈரான் நீர்வழியாகவும் செல்ல வேண்டும் என ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் காஸிம் கரிபாபாதி தெரிவித்துள்ளார். ஓமன் முன்மொழிந்த “சமமாகப் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை” ஈரான் நிராகரித்துள்ளது. காரணம், அது ஈரானின் பாதுகாப்பு கவலைகளை தீர்க்காது என கரிபாபாதி கூறியுள்ளார்.

 

அவர் மேலும், ஓமன் இந்த திட்டத்தை ஏற்காவிட்டால், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என எச்சரித்துள்ளார்.

ஈரான், ஹார்முஸ் நீரிணையில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த Traffic Separation Scheme (TSS)-ஐ இனி அங்கீகரிக்கவில்லை என அறிவித்துள்ளது. அந்த பாதை பெரும்பாலும் ஓமன் நீர்வழியில் அமைந்துள்ளது, இது ஈரானின் பாதுகாப்பு தேவைகளுக்கு முரணாக உள்ளது என அவர் தெறிவித்துள்ளார்.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணை செல்லும் கப்பல்களை கண்காணிக்க அதிக கட்டுப்பாடு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், ஓமன் அழைத்தாலும், எந்த மூன்றாம் நாடும் ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளை அகற்ற அனுமதிக்கப்படமாட்டாது என ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த நிலைமை, உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.