கோட் ரிலீஸுக்குப் பிறகே அரசியல் மாநாடு
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் ஒரு விஜய்யின் தோற்றம் மிகவும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திடம் டி ஏஜிங் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் விஜய் தற்போது அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் அவர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் ஜூலையில் அவர் கட்சி சார்பாக மதுரையில் ஒரு பிரம்மாண்ட மாநாடு நடத்த உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் கட்சி மாநாடு கோட் பட ரிலீஸுக்குப் பின்னரே நடக்குமாம். ஏனென்றால் அரசியல் மாநாட்டில் எதாவது பேசி கோட் பட ரிலீஸூக்கு பிரச்சனைகள் எதாவது வந்துவிடப்போகிறது என அச்சப்படுவதாக சொல்லப்படுகிறது.