வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

20.02.2024 11:49:08

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (20) போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. .

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய இப்போராட்டம் 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பித்து டிப்போ சந்தியில் நிறைவுற்றது.

தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்து 8ஆம் ஆண்டிற்குள் செல்லும் நிலையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமயத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி உள்ளிட்ட சிங்கள மக்களும் கலந்து கொண்டனர்.