100 எபிசோட்களை கடந்த ராஜபார்வை

18.08.2021 06:50:51

ஒரு காலத்தில் சினிமா 100 நாட்கள் ஓடினால் கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடுவார்கள். இப்போது சீரியில் 100 எபிசோடை கடந்தால் வெற்றியை கொண்டாடுகிறார்கள். காரணம் இப்போது தொடங்கப்படும் பல சீரியல்கள் டிஆர்பியில் உரிய இடத்தை பெறாவிட்டால் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டு அப்படியே ஓரம்கட்டப்பட்டு காணாமலும் போய்விடுகிறது. எனவே ஒரு தொடர் 100 எபிசோடை ஒரே ஒளிபரப்பு நேரத்தில் கடப்பதே சாதனை ஆகிவிட்டது.

அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கப்பட்ட ராஜபார்வை தொடர் 100 எபிசோட்களை கடந்து இருக்கிறது. அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் இதனை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதில் முனிப் ரகுமான், ராஷ்மி ஜெயராஜ், விகாஷ் சம்பத், கீர்த்தி விஜய், யாழினி ராஜன், ஆர்த்தி ராம்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். பார்வையற்ற இளைஞனுக்கும், ஒரு கிராமத்து பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்ட தொடர்.