தமிழரசுக் கட்சியின் மகளீர் தின நிகழ்வு !

07.03.2021 08:22:55

இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் ஆரம்பமானது. கட்சியின் கொடியை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

இதன்பின்னர், அன்னை பூபதிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணித் தலைவி சிறிகாந்தன் கலைவாணி தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.