மகிந்தவின் மகனின் மறைவிடம் அம்பலம் !

22.05.2022 09:41:55

முன்னாள் பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி சென்று மெல்பேர்ண் நகரில் வசித்து வரும் நிலையில் அவரை காப்பாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யோஷித ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்று மெல்பேர்ணில் உள்ள இந்திக பிரபாத் கருணாஜீவ மற்றும் அவரது மனைவி ஷாதியா கருணாஜீவ ஆகியோரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக அண்மையில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி வெளியாகிய பின்னர், யோஷித மற்றும் அவரது குடும்பத்தினர் ராஜபக்சவினருக்கு நெருக்கமான மோசடி கும்பலான கபில சந்திரசேன என்பவரின் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிறிலங்கா மக்கள் மகிந்த மற்றும் கோட்டாபய அரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் மகிந்தவின் மகன் யோஷிதவின் இருப்பிடம் பற்றிய தகவல் வெளியாகிய உள்ள நிலையில் மகிந்தவுக்கு புதிய சிக்கலை தோற்றுவித்திருக்கின்றது.

இந்நிலையில் குறித்த அவுஸ்திரேலியா வாழ் மக்களிடமிருந்து யோஷிதவை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன 

 

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்த காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டனர். அப்போது பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற வகையில், அந்த நிறுவனத்திற்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் அவர் மீது இலங்கையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அவர் ராஜபக்சக்களின் நெருங்கிய கையாட்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ராஜபக்சவினரின் நெருக்கமான மோசடியாளர்கள் புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

 

யோஷித ராஜபக்சவோ அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அவுஸ்திரேலியாவில் இல்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் உள்விவகார திணைக்களத்தின் அங்கமான சட்ட அமலாக்க முகவரான அவுஸ்திரேலிய எல்லைப் படை வெளியிட்டது போன்ற போலி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

இந்த அறிக்கையையை வெளியிடும் போது (Border) என அதில் பதிவிடுவதற்கு பதிலாக எழுத்து பிழையுடன் வெளியிட்டு சிக்கியுள்ளனர்.

இலங்கையில் இருந்து தப்பி வரும் மோசடியாளர்களை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்க வேண்டாம் என அங்குள்ள இலங்கையர்கள் கடுமையான கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.