அவுஸ்திரேலியாவில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி!

05.07.2026 13:12:52

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடல் பறவை ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதன் மூலம், அவுஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பதிவான மூன்றாவது மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் மாறியுள்ளது. அந்நாட்டில் இதுவரை மொத்தம் 3 மாநிலங்களில் 6 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொய்டர்ஸ் ஊடக தகவலில் படி,  H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ள போதிலும் கோழிப்பண்ணைகள் மற்றும் முட்டை,  கோழி இறைச்சி விநியோகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்,  இது தொடர்பான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்