பொலிஸ் அதிகாரிக்கு பிணை

16.04.2022 06:46:58


ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விடுமுறை நாளான இன்று அவருக்காக ஏராளமான நீதிபதிகள் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த அதிகாரிக்கு பிணை வழங்கிய நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.