இந்தியாவுடனான எல்லையைக் கண்காணிக்க - வாங் ஹைஜியாங் நியமனம்
08.09.2021 09:10:15
இந்தியாவுடனான எல்லையைக் கண்காணிக்கும் சீன ராணுவத்தின் மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் கமாண்டராக வாங் ஹைஜியாங்கை சீன அதிபர் ஜி ஜின்பிங் நியமித்துள்ளார். வாங் மற்றும் நான்கு ராணுவ அதிகாரிகளுக்கு தளபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு இணையதளமான சைனாமில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டதற்கு பின் சீன மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் கமாண்டராக 4வது அதிகாரியாக வாங் ஹைஜியாங் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சீனாவின் மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவு, ஜின்ஜியாங், திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் இந்தியாவுடனான எல்லைப் பகுதி ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் இந்தப் பிரிவின் கீழ்தான் அதிகமான நிலப்பரப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.