முன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகலாவை சந்தித்த முக்கியஸ்தர்!

23.02.2023 07:48:14

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனை ஜப்பான் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் கானா மொரிவகி நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பிலுள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

 

சந்திப்பில் வட மாகாணத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து ஜப்பானிய தூதரக அதிகாரி கேட்டறிந்துள்ளார்.

அவரிடம் தேசிய மற்றும் வடக்கின் அரசியல் நிலைவரம் தொடர்பாகவும் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் விஜயகலா மகேஸ்வரன் இதன்போது எடுத்துக் கூறியதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.