Baahubali the Eternal War 1 விரைவில்!
06.11.2025 14:25:46
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் பாகுபலி.
இத்திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், ராணா இப்படி நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர்.
இப் படம் இன்று வரையில் சரித்திரப் படங்களில் முதலிடத்தில் உள்ளது என்று கூறலாம்.
இந்நிலையில் அதே பாகுபலி கூட்டணி, அதே கதைக்களத்தில் இன்னும் கொஞ்சம் கற்பனை, fantasy கலந்து அனிமேஷன் வடிவில் Baahubali the Eternal War 1 என்று திரையில் வெகு விரைவில் வெளிவரப் போகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் Baahubali the Eternal War 1 ட்ரைலர் வெளியாகியுள்ளது.