ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை!

19.11.2025 13:57:51

தெற்கு ஜப்பானிய கடலோர நகரமான ஒரு பகுதியில் 170க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இரவு முழுவதும் எரிந்தும் இன்னும் முழுமையாக அணையவில்லை என்று தேசிய தீயணைப்பு நிறுவனம் புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது.

 

டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 770 கிமீ (478 மைல்) தொலைவில் உள்ள ஒய்டா நகரின் சாகனோசெக்கி மாவட்டத்தில் சுமார் 175 குடியிருப்பாளர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 5:40 மணியளவில் (0840 GMT) தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரகால தங்குமிடத்திற்கு ஓடிவிட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.