
மாபெரும் சாதனை படைத்த ‘தண்டேல்‘
19.02.2025 08:15:00
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் கடந்த 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனையைப் படைத்து வருகின்றது.
இயக்குநர் சந்து மொந்தேத்தியின் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
இப் படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் 8 ஆம் நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இத் திரைப்படம் உலகளவில் இதுவரை 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.