குருந்தூர் மலையில் நடப்பது என்ன..!

26.02.2023 18:00:00

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் செய்துள்ளனர்.

தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தினரின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குருந்தூர் மலையில் இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் விகாரை நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்கள் திடீர் விஜயம் செய்து களநிலவரங்களை ஆராய்ந்துள்ளனர்.