இலங்கை அணியின் லஹிரு திரிமான்னவும், தனஞ்சய டிசில்வாவும் எதிர்வரும் 07ஆம் திகதிக்குள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம்...

03.03.2021 09:20:17

 

இலங்கை அணியின் லஹிரு திரிமான்னவும், தனஞ்சய டிசில்வாவும் எதிர்வரும் 07ஆம் திகதிக்குள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள ஏனைய இலங்கை அணி வீரர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திரிமான்ன மற்றும் தனஞ்சய ஆகியோர் தங்களது உடற்தகுதி சோதனையினை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ள நிலையிலேயே மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

திரிமான்ன இலங்கை அணியின் தலைமைப் பயிற்சிவிப்பாளர் மிக்கி ஆர்தருடன் கொவிட் தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை மேற்கொண்டதன் பின்னர், சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த அவரிடம் இறுதியாக மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.