250 பிள்ளைகளுடன் ஆகாயத்தில் ஒரு பயணம்'!

01.10.2025 08:00:00

 

 

இலங்கை முழுவதிலுமிருந்து 250 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான நாட்டின் மிகப்பெரிய விமானம், சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. 

இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் கவர்ச்சிகரமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை வானிலிருந்து காணும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கிய "தெரண, சிக்னல் ஆகாயத்தில் ஒரு பயணம்" திட்டம் இன்று (01) காலை வெற்றிகரமாக ஆரம்பமானது 

இந்நாட்டின் சிறுவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விமான பயணத்தில் பங்கேற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 250 ஆகும். 

எப்போதும் சிறுவர்களுக்கு சிறந்ததை வழங்கும் 'டிவி தெரண', இந்த ஆண்டு சர்வதேச சிறுவர்கள் தினத்துடன் இணைந்து இலங்கை பிள்ளைகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க முடிவு செய்தது. 

அதன்படி, இலங்கையின் அதிசயங்களை முதன்முறையாக வானிலிருந்து காணும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் தெரண, சிக்னல் ஆகாயத்தில் ஒரு பயணம்" திட்டம் தொடங்கப்பட்டது. 

12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இந்த பெறுமதிக்க வாய்ப்பிற்காக, "ஆகாயத்தில் இருந்து என் நாடு"என்ற கருப்பொருளில் 250 சொற்களுக்கு குறையாத கட்டுரை அல்லது அழகான ஓவியத்தை வரைந்து தபால் மற்றும் வட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, "ஆகாயத்தில் இருந்து என் நாடு" என்ற தலைப்பில் அனுப்பப்பட்ட சிறந்த மற்றும் மிகவும் ஆக்கப்பூர்வமான வரைபடங்கள், கட்டுரைகளில் இருந்து 250 பிள்ளைகள் "ஆகாயத்தில் ஒரு பயணம்" திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 250 பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையின் புதிய அனுபவத்தைப் பெறும் நோக்கத்துடன் இன்று காலை தெரண தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். 

பின்னர் கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 5 சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகளை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். 

உண்மையான விமான அனுபவத்தை வழங்கும் வகையில், பிள்ளைகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் மிகப்பெரிய விமானமான UL 20 இல் ஏறியதுடன், அவர்களின் பலரின் முதல் விமான பயண கனவு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.