ஆறு வருடங்களின் பின்னர் கிழக்கில் ஆசிரியர் நியமனம்

08.07.2023 16:10:28

ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியினைப் பூர்த்தி செய்தவர்களுக்கான ஆசிரியர் நியமனம் 6 வருடங்களின் பின்னராக இன்று(08)  கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் டிப்ளோமா கற்கையினை பூர்த்தி செய்த 37 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்,  திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டு டிப்ளோமாதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த குறித்த பட்டதாரிகளுக்கான நியமனங்கள் சுமார் 6 வருடங்கள் தாமதமாகிய பின்னர் கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.