தைவான் வான் எல்லைக்குள் படையெடுக்கும் சீன போர் விமானங்கள்
தைவான்-சீனா ஆகிய நாடுகளின் மோதல் பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வந்த நிலையில் சமீபத்தில் தைவான் வான் எல்லையில் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் ரேடார் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடலில் உள்ள சிறிய தீவு நாடான தைவானில் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. தைவான் அதிபர் சாய் இங் வென் ஜனநாயக கொள்கைகளைப் பின்பற்றும் அமெரிக்கா, இந்தியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக தனது தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலமாக சீன கம்யூனிச அரசு தைவானை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது சீன கடற்படை மற்றும் விமானப் படையினர் தைவான் எல்லைக்குள் அத்துமீறி வருகின்றனர்.
தைவான் தன்னை தற்காத்துக்கொள்ள அமெரிக்காவுடன் ஆயுத ஒப்பந்தம் இட்டது. அதிக ராணுவ பலம் கொண்ட சீனாவை தைவான் உலக நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனாலும் அவ்வப்போது சீன விமானப்படை இறைவனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது வாடிக்கை.
இதனைத்தொடர்ந்து தற்போது சீன வான் எல்லைக்குள் நுழைந்ததாக ரேடார் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1949ஆம் ஆண்டு சீனா, தைவான் போர் முடிவுக்கு வந்தது. அப்போது துவங்கி ஜனநாயக நாடாக இயங்கிவரும் தைவான் அவ்வப்போது சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக 380 சீன போர் விமானங்கள் தைவான் வான் எல்லையில் பறந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. தைவான் விமானப் படை வீரர்களின் குடும்பங்களை சீன விமானப் படையினர் தகாத முறையில் விமர்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.