சூரியின் ‘கருடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..
நடிகர் சூரி சமீப காலமாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் ’விடுதலை’ படத்தின் வெற்றியை அடுத்த அவர் ’விடுதலை 2’ ’கொட்டுக்காளி’ ’கருடன்’ உள்பட சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் வெற்றிமாறன் கதை வசனத்தில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான ‘கருடன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் மே மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
அந்த வகையில் சற்றுமுன் வெளியான ‘கருடன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான நிலையில் அதில் சூரி மற்றும் சசிக்குமாரின் அட்டகாசமான காட்சிகள் உள்ளன. மேலும் இந்த வீடியோவின் இறுதியில் மே 31ஆம் தேதி ‘கருடன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணியை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் சூரி மற்றும் சசிகுமார் புரமோஷன் பணிகளில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.