தாயகம் திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு

03.09.2021 14:47:52

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குரூப் 1 பிரிவில் அரசுப்பணி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மாரியப்பன் கூறியுள்ளார்.

மற்ற வீரர்களுக்கு அரசு பணி வழங்கியது போல் எனக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தங்கத்தை இலக்காக கொண்டு சென்றேன். மழை பிரச்சனை காரணமாக வெள்ளி வெல்ல முடிந்தது.

அடுத்த பாரா ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.