மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 17,712 கனஅடி சரிவு

07.09.2021 05:51:20

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 22,076 கனஅடியில் இருந்து 17,712 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.83 அடியாக இருக்கிறது. அணையில் நீர்இருப்பு 36.08 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 650 கனஅடியாக உள்ளது.