பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

10.02.2025 08:26:51

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) ஆகியவற்றின் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக SDIGஅசங்க கரவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல்மாகாண (வடக்கு) பொறுப்பதிகாரியாக பிரதி பொலிஸ் மா அதிபர் பி.லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.டி.பி.தயாரத்ன FCID க்கு மாற்றப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.